பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மருத்துவமனையின் சாதாரண சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரின் உடல் நிலை தேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொரிஸ் ஜோன்சன் 10 நாள்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்து பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் திங்களன்று அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
நேற்று வியாழக்கிழமை பொரிஸ் ஜோன்சன் செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் மேலும் "மிகவும் நல்ல மனநிலையில்" அவர் இருப்பதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளதாக இன்று நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments