Ticker

6/recent/ticker-posts

லிபியாவின் இடைக்கால பிரதமராக இருந்த மஹ்மூத் ஜிப்ரில் கொரோனா தொற்றால் மரணம்!




லிபியாவின் 2011ம் ஆண்டு  ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் இடைக்கால பிரதமராக இருந்த  மஹ்மூத் ஜிப்ரில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடாபியன் ஆட்சி  கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, 2012 ல் நான்கு தசாப்தங்களின் பின்னர்  லிபியாவில்  சுதந்திரத் தேர்தல்  நடாத்தப்படும் வரை ஜிப்ரில் இடைக்காலத் தலைவராக இருந்தார்.

கெய்ரோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இறந்ததாக அறிய வருகிறது.  அங்கு அவர் கடந்த மாதம் பிற்பகுதியில் வைரஸ் பாதிப்புக்குள்ளானதில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக  அவரது உதவியாளர் பவ்ஸி அம்மார் தெரிவித்துள்ளதாக ரொய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


Post a Comment

0 Comments