அமெரிக்க பொது சுகாதார சேவை ஆணையத்தின் தலைவர் ஜெரோம் எடம்ஸ் இந்த வாரம் பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கைக்கு கடினமான மற்றும் வலிமிகுந்த சோகமான நாட்களாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் வரவிருக்கும் அழிவு, கடுமையான காலங்களை நினைவூட்டுவதாக அமையும் என்று ஜெரோம் எடம்ஸ் கூறியுள்ளார்.
பெர்ல் துறைமுகம் தாக்குதல் மற்றும் செப்டம்பர் 9 / 11 தாக்குதல் நிகழ்வுகளைப் போன்று வலி மிகுந்ததாக அது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்புப் போராட்டத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, நாடு தழுவிய இறப்பு எண்ணிக்கை 8,503 என்றும் 312,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments