உலக சுகாதார அமைப்பிற்கான (WHO) தனது நாட்டின் நிதியுதவியை நிறுத்துவதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ட்ரம்பின் இந்த முடிவை எதிர்ப்பதாக அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.
ஒரு உலகளாவிய ஒரு தொற்றுநோய் ஆபத்தையும் மற்றும் பாரிய தீங்கையும் விளைவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ட்ரம்ப் எடுத்த இந்த முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்டடு வருகிறது.
"கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு தலைமை தாங்கும் உலக சுகாதார அமைப்பிற்கு WHO நிதியளிப்பதை நிறுத்துவது என்பது புத்தியில்லாத செயல்” என்று பெலோசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மருத்துவ சங்கம் (ஏஎம்ஏ) ட்ரம்ப்பின் முடிவை “மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளது.
“ஒரு நூற்றாண்டில் மிக மோசமான பொது சுகாதார நெருக்கடியின் போது, உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை நிறுத்துவது ஆபத்தானதும், தவறானதாகும் என்றும் கூறியுள்ள அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் பெட்ரிஸ் ஹெரிஸ் டிரம்பின் இந்த முடிவு கோவிட் -19 ஐ தோற்கடிப்பதை எளிதாக்காது ”என்றும் கூறியுள்ளார்.

0 Comments