லாஹுரிலிருந்து கராச்சி நோக்கி பயணித்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸக்கு சொந்தமான விமானம் கராச்சியில் தரையிறங்க இருந்த நிலையில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்தள்ளது. இந்த விமானத்தில் 100 க்கும் அதிகமானவர்கள் பயணித்ததாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் 99 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உள்ளனர் என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாகூரிலிருந்து நள்ளிரவு 2:30 மணிக்கு புறப்பட்ட விமானம் தரையிறங்கவிருந்த நிலையில் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா கான் சர்வதேச ஊ்டகங்களுக்கு தெரிவித்ததாக சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற பொது முடக்கத்தைத் தொடர்ந்து, உள்நாட்டு வணிக விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்ட சில நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

0 Comments