இதற்கு முன்னதாக இந்த பொறுப்பில் ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகடானி இருந்தார்.
புதிய பொறுப்பு குறித்து ஹர்ஷவர்தன் அளித்த பேட்டியில், 'உலகம் கொரோனா வைரஸால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கிய பொறுப்பை நான் உணர்ந்துள்ளேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு சுகாதாரம் தொடர்பான சவால்கள் இருக்கும். அதனை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்' என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்புக்கு ஆலோசனைகள் வழங்குதல், அமைப்பின் முடிவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அதை நிறைவேற்ற உதவியாக இருத்தல் உள்ளிட்டவை நிர்வாகக்குழுவின் முக்கிய பணிகளாகும்.
கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு, நிர்வாகக்குழுவின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்று ஏக மனதாக முடிவு செய்திருந்தது. இதற்கு கடந்த செவ்வாயன்று 194 நாடுகளைக் கொண்ட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது.

0 Comments