நாவிதன் வெளி பிரதேசத்தில் இடம் பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் இதற்கு பதிலளித்துள்ளார்.
"நான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று காரைத்தீவு பிரதேச சபைத் தலைவர் கூறியுள்ளார். ”
“ஆம் அது உண்மை. நான் கொரோனாவை விட ஆபத்தானவன். நான் புலிகளுடன் இருந்தபோது, ஆனையிரவு முகாமில் இருந்த 2000-3000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஒரே இரவில் கொன்றிருக்கிறேன். அதே போல கிளிநொச்சியில், அதைவிட அதிகமானோரை கொன்றிருக்கிறேன். ”
“இலங்கையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் ”என்று முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானின் இந்த உரையின் வீடியோ காட்சிகளை நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையம் தனது செய்தி ஒளிபரப்பின் போது ஒளிபரப்பியது.

0 Comments