வாழைச்சேனை, ஒட்டாமாவடி, மற்றும் ரிதிதென்ன பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் அமைப்புகளுடனான சந்திப்பு அவரது ஏறாவூர் காரியாலயத்தில் அண்மை யில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார.;
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் தாமும் சாதிக்கவேண்டும் என்ற வேட்கை யில் இயங்கி வருவதை நாம் பார்க்கின்றோம். எனினும் அவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்கள் உரியமுறையில் வழங்கப்படாமை பெரும் குறைபாடாக இருக்கின் றது. குறிப்பாக படித்துவிட்டு தொழில்வாய்ப்பற்று இருப்பவர்களுக்கு இவ்வாறான வழிகாட்டல்கள் முற்றாக கிடைக்கப்பெறாமல் இருக்கின்றன.
எனவே, இத்தகைவர்களிடையே அவர்களிடம் இயல்பாக அமைந்திருக்கும் திறமைக் களைக் கண்டறிந்து அதற்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண் டியது அவசிமானது. அத்தோடு விளையாட்டுத்துறைகளில் அவர்களை ஊக்குவித்து தேசிய அளவில் அவர்கள் மேம்பாடுஅடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் கல்குடா தொகுதியில் என்னால் 2000 பேருக்குத் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்கான தொழில்துறைகள் உருவாக்கப் படும். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இதற்கான திட்டங்களை வழிநடத்துவேன். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடாகவும் மேலதிக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.

0 Comments