Ticker

6/recent/ticker-posts

“'எனது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அல்லது எனக்கு உதவியவர்களுக்கு கடன் வழங்குமாறு ஒருபோதும் நான் வங்கிகளுக்கு கூறியதில்லை” ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ


எனது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அல்லது எனக்கு உதவியவர்களுக்கு கடன் வழங்குமாறு ஒருபோதும் நான் வங்கிகளுக்கு கூறியதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வங்கியின் செயலாற்றுகை மீளாய்வு தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

விவசாயிகள் முதல் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு அரச வங்கிகள் முன்னணியில் இருக்க வேண்டும் .கடன் வட்டி வீதத்தை குறைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடிப் பங்களிப்பு ஆற்ற வேண்டும் .
அரசாங்கமொன்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டியது அரச வங்கிகளின் பொறுப்பாகும் .
அதனை விளங்கிக்கொண்டு பொருளாதாரத்தைச் செயற்திறனாகப் பேணுவதற்கான மூலோபாயத்தை முன்கொண்டு செல்வது வங்கிகளின் முக்கிய பொறுப்பாகும்.
இன்றுள்ள நிலைமைக்கு உலகின் எந்தவொரு நாடும் இதுவரையில் முகங்கொடுக்கவில்லை. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பழைய முறைமைகளிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும்.
மக்கள் எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நான் பின்நிற்கப் போவதில்லை . அதிகாரமானது ஒருபோதும் அரசியலுக்காக அன்றி, அது நாட்டுக்கானதாகும் எனது அதிகாரங்களை யாரும் துஸ்பிரயோகம் செய்தால், அதற்குப் பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கு நான் பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments