Ticker

6/recent/ticker-posts

பௌத்த நாடுகளில் கொரோனா இறப்பு குறைவாக இருக்கிறது! ரணில் விக்கிரமசிங்க


இலங்கை உட்பட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது  ஒரு சிறப்பு அம்சமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க கூறுயுள்ளார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள வாலுகாராம விகாரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசார பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் விதத்தில்  இந்த தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொள்ள  எதிர்பார்ப்பதாகவும்  ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

உலகில் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த நாடுகளாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தேரவாத புத்த நாடுகளே இருப்பதாகவும். குறிப்பாக தாய்லாந்து, கம்போடியா, மியான்மர் மற்றும் இலங்கை நாடுகளை குறிப்பிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments