Ticker

6/recent/ticker-posts

மேல் மாகாணத்தில் திடீர் சோதனையின் போது 902 பேர் கைது செய்யப்பட்டனர்


மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட  சோதனை நடவடிக்கையின் போது 902 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவற்றில் 515 பேர் ஏற்கனவே நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாவர், இதில் 387  நபர்கள் போதைப்பொருள் விற்பனை தொடர்பானவர்கள் என அறிய வருகிறது. 

இவர்களில் 172 பேர் ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 99 பேர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (14) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சுற்றிவளைப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 6 கிலோ 950 கிராம் “மாவா“ என்ற போதைப்பொருளுடன்  ஒரு சந்தேக நபரை அதுருகிரியா பொலிசார் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments