பொலன்னறுவை புலதிஸ்ஸி புத்தி மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில் இன்று முற்பகல் அந்த நிகழ்ச்சிக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் அதிகாரிகள் இது தோ்தல் விதிகளை மீறும் செயலென கூறி அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம்முறை பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த வைபவம் சட்ட விதியை மீறும் செயல் என தேர்தல் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தான் சட்டத்தை மதிக்கும் நபர் என்பதால் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கவில்லை எனவும் தேர்தலின் பின்னர் அவற்றை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

0 Comments