Ticker

6/recent/ticker-posts

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு எட்டு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை!


சமய பாடசாலைக்கு சென்ற ஒன்பது வயது சிறுமியை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் விகாராதிபதியாக செயற்பட்ட 47 வயதுடைய மிகிரிபென்னே சந்தசிரி என்ற பௌத்த பிக்குவிற்கு  எட்டு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ .30,000 / - இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்  கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலூராச்சி இந்தத் தீர்ப்பை  வழங்கியுள்ளார்.

2010 ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி அன்று சமயப் பாடசாலைக்கு வந்த ஒன்பது வயது சிறுமியை கொலன்னாவ பிரதேசத்தில்  உள்ள ஒரு விகாரையின் தலைமைப் பொறுப்பாளராக இருந்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டமா அதிபர்  குறித்த பிக்கு மீது வழக்குப் பதிவு செய்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்  மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான முறையிலும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலூராச்சி தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments