Ticker

6/recent/ticker-posts

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோத்தாபய!



இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பில் இன்னமும் மத்திய வங்கி பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிதி நிறுவனங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. அந்த நிதி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வதென்பது மத்திய வங்கியின் பொறுப்பாகும். எனினும் அந்த பொறுப்பு நிறைவேற்றப்படவில்லை.

மத்திய வங்கி அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றீர்களா? 150 பில்லியன் ரூபாய் பணத்தை விடுவிக்குமாறு அறிக்கப்பட்டது. எனினும் அதனை இன்னமும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான நிலைமைகளில் அனைத்து தவறுகளுக்கும் அரசாங்கமும் நானுமே முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

ஏன் அரசாங்கத்தின் யோசனைகள் செயற்படுத்தவில்லை? அந்த யோசனைகளில் குறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு யோசனைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதற்கமைய நாளை காலைக்குள் உடனடியாக நிதி நிறுவனங்களை பாதுகாப்பாற்கு அவசியமான யோசனைகளை என்னிடம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோபத்துடன், தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments