குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் CIDயில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் கொன்றதாக கருணா தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தன. இதைத் தொடர்ந்து கருணா குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

0 Comments