Ticker

6/recent/ticker-posts

MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா? பதிலளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை கோரும் அத்துரலியே ரதன தேரர்!


கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் தற்போது நம்பிக்கை இழந்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு எம்.சீ.சீ. உடன்படிக்கை பிரதான காரணியாக அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் எம்.சீ.சீ. உட்பட நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை நிராகரிப்பதாக கோத்தாபய ராஜபக்ஷ  வழங்கிய வாக்குறுதியை நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நம்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் திசை நோக்கி வழியமைத்து வருகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் முன்னர் அது சம்பந்தமான சில பணிகளை அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், தொடர்ந்தும் பொய்யான வார்த்தைகளை பயன்படுத்தாது, தேர்தல் வெற்றிக்கான கோஷமாக பயன்படுத்தாது, எம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா இல்லையா என்பது சம்பந்தமாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேரடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments