2022 ம் ஆண்டிற்கான வாக்காளா் இடாப்பு இம்மாதம் (ஜுன்) 15 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை கிராம சேவை அதிகாரிகள் அலுவலகங்கள், பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளா் இடாப்பில் நீக்கப்பட வேண்டிய மற்றும் சேர்க்கப்பட வேண்டிய பெயா்கள் குறித்த தகவல்களை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரையில் பொதுமக்கள் முன்வைக்கக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாக்காளா் இடாப்பில் பெயா் இடம்பெறாதவா்களுக்கு வாக்களிக்க சந்தா்ப்பம் கிடைக்காது என்பதால், தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள கிராம சேவை அதிகாரியை சந்தித்து, வாக்காளா் இடாப்பில் தமது பெயா்களின் பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

0 Comments