முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 30 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மே 9 ஆம் திகதி நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொல்லப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments