Ticker

6/recent/ticker-posts

கொட்டகலை வீதிக்கு அருகில் கிடந்த இளைஞனின் சடலம்!


(ஜி.கே. கிரிஷாந்தன்)

ஹட்டன் - நுவரெலியா வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்திக்கு அருகில் நேற்று (12) சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மொரஹெல,  மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நதீர சம்பத் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிசாாின் விசாரணைகளின்  போது சடலத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும், அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் பணிபுரிபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே நீதவானின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments