Ticker

6/recent/ticker-posts

ஜெனிவாவில் இலங்கைக்கு பகிரங்கமாக ஆதரவளித்த சீனா!


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான  உரையாடலின் போது, ​​ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி திரு சென் சூ, இலங்கைக்கு எதிரான வெளித் தலையீடுகளுக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், குறிப்பாக பயங்கரவாதத்தை எதிர்கொள்வதன் மூலம், நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவித்தல் போன்றவற்றின் இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை சீனா பாராட்டுவதாகத் தூதுவர் சென் வலியுறுத்தினார்.

இலங்கையுடன் பாரம்பரிய நட்பைக் கொண்ட அண்டை நாடான சீனா, தேசிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்து, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சியைப் பேணுவதற்கு இலங்கைக்கு வலுவாக ஆதரவளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தற்காலிக சிரமங்களை போக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தால் மக்களை வழிநடத்த முடியும் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் விளைவு என சீன தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இக்கட்டான சூழலை எந்த நாடும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது சொந்த இலட்சியங்களை அடைய முற்பட்டால், சீனா அதனை எதிர்க்கும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments