Ticker

6/recent/ticker-posts

டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்!


சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் தலைநகருக்கு தெற்கே உள்ள பிற நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டதோடு, பொருள் சேதங்களும்  ஏற்பட்டதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று  (17) அதிகாலை அறிவித்துள்ளது.

சிரிய வான் பாதுகாப்பு படையினர் தாக்குதலை இடைமறித்து, பெரும்பாலான ஏவுகணைகளை வீழ்த்தியதாக அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

தாக்குதலினால் விமான நிலைய செயல்பாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று ரொய்டா் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


Post a Comment

0 Comments