Ticker

6/recent/ticker-posts

ரணிலுக்கு அனுரகுமார கொடுத்த அபாய சமிக்கை!




நேற்று (24) சோசலிச வாலிபர் அமைப் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ 84 பேரை பொலிஸார் கைதுசெய்தனர். நேற்று  கொழும்பு லிப்டன் சுற்றுவட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். அப்பகுதி ஒரு யுத்தக்களம் போல் காட்சியளித்தது. 

பொலிஸாா் மூா்க்கத்தனமான ஆா்ப்பாட்டக்காரா்களை தாக்கி கைது செய்தனா். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மாலை மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்த அனுரகுமார, ரணிலின் அராஜக அடக்குமுறைக்கு எதிராக விரைவில் மக்கள் லட்சக்கணக்கில் வீதிகளுக்கு இறங்குவாா்கள் என்றும், ரணிலுக்கு பதுங்கிக் கொள்வதற்கு இடம் ஒன்றை பாா்த்துக்கொள்ள வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டாா்.

கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலுக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப் பேரணியானது கொழும்பு கோட்டை வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டீன்ஸ் வீதியூடாக மருதானை நோக்கி பேரணி செல்ல முற்பட்ட போது, ​​பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் உயர் அழுத்த நீரை பிரயோகித்து அணிவகுப்பை கலைத்தனர்.

போராட்டத்தின் போது காயமடைந்த 7 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ළඟදීම රනිල්ට හැංගෙන්න තැනක් හොයාගන්න වෙනවා | விரைவில் ரணிலுக்கு ஒளிந்து கொள்ள இடம் தேட வேண்டி வரும்

வீடியோ https://www.youtube.com/watch?v=Dg1BqgKADNA&t=2s 

Post a Comment

0 Comments