Ticker

6/recent/ticker-posts

கோட்டா எடுத்த முடிவால் சதொசவுக்கு சுமார் 600 கோடி ரூபா நட்டமாம்!


பருப்பு மற்றும் டின் மீன் போன்றவற்றை இறக்குமதியாளர்களிடமிருந்து கூடிய விலைக்கு கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்ததால் சதொசவுக்கு பாாிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருப்பு கிலோ ஒன்றுக்கு 89 ரூபா குறைத்தும்,  டின்  மீன் ஒன்றுக்கு 110 ரூபா குறைத்தும் விற்பனை செய்ததன் மூலம் லங்கா சதொச நிறுவனத்திற்கு சுமார் 600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இறக்குமதியாளர்களிடம் இருந்து ஒரு கிலோ பருப்பு 154 ரூபாவுக்கு கொளவனவு செய்யப்பட்டு  65 ரூபாவுக்கு விற்பட்டதாலும், 210 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட  டின் மீன் ஒன்று 100 ரூபாவுக்கும்  விற்பனை செய்யப்பட்டதாலும் அந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

கடந்த கொரோனா காலத்தில் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் லங்கா சதொச ஊடாக பருப்பு மற்றும் டின் மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

Post a Comment

0 Comments