அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்திய காரணத்திற்காக அந் நாட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான தாரனே அலிதூஸ்தியை ஈரானிய பொலிசாா் கைது செய்துள்ளனர்.
அந்த நாட்டைப் பற்றிக் கொண்டுள்ள எதிா்ப்பு போராட்டம் குறித்து "பொய்களைப் பரப்பினார்" என்ற குற்றச்சாட்டின் பேரில் தாரனே அலிதூஸ்தி கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், போராட்டக்காரா் ஒருவருக்கு அந்நாட்டில் வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அலிதூஸ்தி, ஒஸ்கார் விருது பெற்ற தி சேல்ஸ்மேன் திரைப்படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானவர்.
38 வயதான அலிதூஸ்தி, அவர் தனது பதிவில், முஹ்சின் ஷெகாரி என்ற நபருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக பேசாத சர்வதேச அமைப்புகளை குற்றம் சாட்டியிருந்தாா்.

0 Comments