எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டக்காரர்களுடனான மோதலின் போது ஒரு பொலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதை தொடா்ந்து, சமூக ஊடக தளமான TikTok மீது "தற்காலிகத் தடை" விதிப்பதாக ஜோர்தான் அறிவித்துள்ளது.
ஜோா்தான் நாட்டில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து லொரி ஓட்டுநர்கள் கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் ஜோர்தான் முழுவதும் பல நகரங்களுக்கு பரவியுள்ளன.
வியாழக்கிழமையன்று பல நகரங்களில் மோதல்கள் வெடித்தன. போராட்டக் காரா்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
போராட்டக்காரர்கள் வன்முறையை பரப்ப டிக்டொக் செயலியை தவறாக பயன்படுத்துவதாக அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Comments