ஜாதிக ஹெல உறுமய இன்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது கருத்து வெளியிட்டார்.
வெறும் பிரசார, விநோத மற்றும் களியாட்ட அரசியல் எம்மிடம் இல்லை. நாட்டில் துன்பப்படும் மக்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பிரவேசத்தின் எதிர்காலத்திற்காகவே நாங்கள் உள்ளோம். இந்த மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. இந்த மக்களிடம் இருந்து பெற்றோல், டீசல், கோதுமை மற்றும் பால்மா ஆகியவற்றில் இருந்து வரிப்பெற்று மிகவும் மோசமான அபிவிருத்தியை நாட்டில் செய்துள்ளனர். குடும்ப வருமானம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. மக்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி அவசியமாகும். மக்களின் இந்த பயணத்தை வெளிநாட்டு நடிகைகளின் களியாட்டங்களினால் நிறுத்த முடியாது. இதற்கு செலவிடுவது எம்மிடம் இருந்து பால்மா மற்றும் கோதுமை மாவினால் அறவிடப்பட்ட வரி பணத்தில் என்பதை மறந்து விட வேண்டாம்.

0 Comments