புலிகள் இயக்கத் தலைவா்களான கே.பி., ராம், நகுலன் போன்றவா்களை உடனடியாக கைது செய்யுங்கள்.இந்த அரசாங்கம் கே.பி., கருணா, ராம், நகுலன் போன்ற முக்கிய புலித்தலைவர்களை தம் பக்கம் வைத்துக் கொண்டு எதிரணிக்கு புலி சாயம் பூசி வருகின்றது. ஆனால் உண்மையான புலிகள் மஹிந்த ராஜபக்ஷவோடு இருப்பதாக ஹெல உறுமய கட்சியின் செயலாளா் சம்பிக்க குற்றம் சாட்டியுள்ளாா். நேற்று எதிரணி வேட்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவா் இவ்வாறு குற்றம் சாட்டினாா்.
2005ம் ஆண்டு சுனாமி வீடமைப்பு திட்த்திற்கென்று ஜயலங்கா திட்டத்தின் கீழ் புலிகள் இயக்க எமில் காந்தனுக்கு பசில் ராஜபக்ஷ ஊடாக 700 மில்லியன் ரூபாய்கள் வழங்கியதாக தகவல்கள் கிடைத்ததாகவும் அவா் மேலும் குறிப்பிட்டாா்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னா் புலிகளின் தலைவராக கே.பி என்ற குமரன் பத்மநாதனே நியமிக்கப்பட்டாா். இவா் நாட்டின் பல கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் தொடா்பு பட்டவா். ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் நாட்டுக்குள் இவா் கொண்டு வர உதவி புரிந்துள்ளாா். இவா் இப்போது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கிறாா். கிளிநொச்சி பகுதியில் மஹிந்தவின் தோ்தல் பணிகளை இவரே செய்து வருகிறாா்.
கிழக்கு மாகாணத்தின் கொலைகளுக்கு பொறுப்பான ராம், நகுலன் போன்ற புலி பயங்கரவாதிகளை ஜனாதிபதி கிழக்கு மாகாண தமது தோ்தல் வேலைகளுக்கு அமா்த்தியுள்ளாா் என்று குறிப்பிட்ட சம்பிக்க புலிகள் இயக்கத் தலைவா்களான கே.பி., ராம், நகுலன் போன்றவா்களை உடனடியாக கைது செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டாா்.

0 Comments