எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்
தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு தற்போது கொழும்பு பண்டாரநாயக்க
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.
“மஹிந்த சிந்தனை உலகத்தை வெல்லும் வழி” என ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் பெயரிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள், அமைப்புக்களின்
பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

0 Comments