Ticker

6/recent/ticker-posts

இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த மேலும் 38 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்றிரவு இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில்  திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அறிவிப்புக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 28 இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நேற்று முற்பகல் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை – இந்தியாவிற்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 இலங்கை மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளாலும் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் இன்று பரிமாற்றிக்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பதிகாரி எஸ்.ரி சதாசிவம் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments