Ticker

6/recent/ticker-posts

கிழக்குமாகாணத்தில் வெள்ள நிவாரணப் பணியை துாிதப்படுத்த வேண்டுகோள்


கிழக்குமாகாணத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் குறித்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கிழக்குமாகாணத்தில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் செயலாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments