இந்த நாட்டினுடைய அனத்து வளங்களும் அனைத்து மக்களுக்கும் உரித்தானதாகும், முஸ்லிம், இந்து, கீரிஸ்தவம், சிங்களம் என நாம் எலோரும் இலங்கையர் என்ற வகையில் ஒரு தேசிய இனமாகும். எங்களுடைய கலாச்சாரம் மட்டுமே மாறுபடுகின்றது. அவ்வாறானதொரு இலங்கை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவே நாங்கள் எல்லோரும் மைத்திரிபாலவின் குடையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளோம் என கடுவள தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும்
மேல் மாகான சபை உறுப்பினர்களான பைரூஸ் ஹாஜியும் முஜிபுர் ரஹ்மானும் ஏற்பாடு செய்த இப்பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, முன்னாள் ஊடகவியலாளரும் தற்போதைய மேல் மாகாண சபை உறுப்பினருமான மரிக்கார், மொழும்பு மாநகர சபை உறுப்பினர்களும் தொகுதி அமைப்பாளர்களும் வருகைதந்திருந்ததோடு, பெரும் திரளான பொதுமக்களும் பிரசன்னமாயிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சுஜீவ சேனசிங்க, நான் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஞபகப்படுத்த விரும்புவதாவது, நீங்களும் உங்களுடைய அரசாங்கமும் இந்த நாட்டில் வாழ்கின்ற அப்பாவி முஸ்லிம்களை கஸ்டத்துக்கு உள்ளாக்கி அவர்களுடைய மனதினை நோககடித்தமை, இனவாதத்தை தூண்டி விட்டமை, முக்கியமாக பேருவளை தர்கா டவுன் பிரதேசங்களில் இன வன் முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் அல்லாமல் பாதுகாப்பு தரப்பினருக்குக் கூட வன்முறைகளை நிறுத்துமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்காது இருந்தமைக்காகவே இந்த நாட்டு தொன்னூற்றி ஒன்பது வீதமான முஸ்லிம்கள் ஓட்டு மொத்தமாக மைத்திரிபாவுக்கே வாக்களிக்கும் தீர்மானத்தை எப்போதோ எடுத்து விட்டார்கள் எனக் கூறினார்.
அதனால் நான் மஹிந்தவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவதாவது இனவாதத்தை தூண்டி, குடும்ப ஆட்சியையும், குடும்ப அதிகாரத்தையும் பாவித்து நாட்டு மக்களை இனவன்முறைககளை ஊக்குவித்து நாட்டினை படு குழிக்குள் இட்டுச்செல்லும் உங்களையும் குடும்பத்தையும் வருகின்ற ஜனவரி 9ம் திகதி முன் அலரி மாளிகையை சுத்தம் செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு இவ்விடத்தில் பகிரங்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பாளரமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ எந்த வகையிலும் நினைத்துப் பார்க்காத ஒருவர் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டதனால் இப்போது இது சர்வதேசத்தின் சதிதிட்டமென்று எல்லா பிரச்சார மேடைகலிலும் கூறிவருகின்றார். இலங்கையில் தமிழர்கள் பதினெட்டு வீதமென்றும், முஸ்லிம்கள் எட்டு வீதமென்றும், கிரிஸ்தவர்கள் எட்டு வீதமென்றும் ஜனதிபதிக்கு தேர்தல் அறிவித்தற்கு பிற்பாடுதான் மஹிந்தவுக்கு தெரிந்திருக்கின்றது. தற்போது சொல்கின்றார் நான் சிறுபானமை மக்களுக்காக அதை செய்வேன் இதை செய்வேன் என்று . பத்து வருடங்களாக தேங்காயா திருவிக் கொண்டிருந்தீர்கள் என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன் என்ற கேள்வி எழுப்பினார்.

0 Comments