‘புதிய தலைமுறை’ (அலுத் பரபுர) எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் நடக்கும் அநீதிகளை வீதி நாடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வரும் கலைஞர்கள் மூன்றாவது தடவையாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இன்றைய தினம் குருநாகலில் இடம்பெற்ற தாக்குதலில் பிரபச சிங்கள கலைஞர்கள் சமனலி பொன்சேகா, லக்ஷ்மன் விஜேசேகர போன்றோர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநீதி, பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் அடிப்படையிலான வீதி நாடகங்கள் மற்றும் இசை நிகழ்வுகளை குறித்த கலைஞர்கள் குழு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments