Ticker

6/recent/ticker-posts

சிட்னி தாக்குதல் விவகாரம்: தீவிரவாதியின் பிணத்தை கடலில் வீச ஆணையிடும் இஸ்லாமியர்கள்

சிட்னி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர ஹொட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை, 16 மணி நேரம் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதி ஹரன் மோனிஸ் (Haron Monis Age-50) பிறகு பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதன்பின் அவன் உடல் இன்னமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் அவன் உடலை கேட்டு, இதுவரை யாரும் அரசை அணுகாததால், அவனது உடல் சிட்னி நகர மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவனது உடலுக்கு இஸ்லாமிய வழக்கப்படி மதச் சடங்குகள் செய்ய மாட்டோம் என அவுஸ்திரேலியாவின் முன்னணி இஸ்லாமிய அமைப்புகளும் மதகுருமார்களும் கூறியுள்ளனர். இதுகுறித்து இஸ்லாமிய மதகுருக்கள் கூறியதாவது, அமைதியான அவுஸ்திரேலியாவில், பயங்கரவாத விதை விதைத்த அவனுக்கு நியாயமான இறுதிச் சடங்கு தேவையில்லை என்றும் அவன் உடலை கடலில் தான் வீச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.  எனவே அவன் உடலை யாரும் கேட்டு வரவில்லை என்றால், அடையாளம் கண்டுபிடிக்க முடியாத கல்லறை தோட்டத்தில் புதைக்கப்படும் என அவுஸ்திரேலியா வட்டாரங்கள் கூறியுள்ளன.

Post a Comment

0 Comments