பாகிஸ்தான் பெஷாவர் நகாில் பாடசாலை மாணவா்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த தஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பெஷாவர் நகாில் உள்ள இராணுவ பாடசாலை ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பெறுப்பான தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா (Maulana Fazluahh), பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இச்செய்தியை தனது பேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்துள்ளது.

0 Comments