Ticker

6/recent/ticker-posts

மந்திரவாதியின் விருப்பப்படியே நடக்கிறது மஹிந்தரின் ஆட்சி! அணுர குமார திசாநாயக்கா

ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் விளையாட்டை, ஊழல் மோசடிகளை, ஆதாரங்களுடன் எடுத்து வைப்பதில் அணுர குமார திசாநாயக்க முன்னணியில் இருப்பவர். அண்மையில் அவா் ஆற்றிய உரையொன்றில் எடுத்துக்காட்டிய  ஒரு விடயத்தை இங்கு பதிவிடுகின்றோம்.

''இன்று இலங்கை நாட்டில் மக்களின் விருப்பப்படியல்ல மந்திரவாதிகளின் விருப்பப்படியே ஆட்சி நடக்கிறது. இந்த நாட்டை மந்திரவாதிகளிடமிருந்து, சூனியக் காரா்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும்.'' 

''நீங்கள் பாா்த்திருப்பீர்கள் மஹிந்த எப்போதும் கையில் எதையோ வைத்து உருட்டி உருட்டி இருப்பாா். இது என்ன கோமாளித்தனம்?  நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் இந்த 21ம் நூற்றாண்டில் ஆட்சி செய்யும் மஹிந்த ராஜபக்ஷ  17ம் நூற்றாண்டின் மனிதராக இருக்கிறாா். இதை மாற்ற வேண்டுமல்லவா?''

''அலாி மாளிகை முழுவதும் இன்று மந்திரக் காரர்கள் நிறைந்திருக்கின்றனர். அலாி மாளிகையில் குழிகள் வெட்டுகிறாா்களாம். ஆடுகளை பலியிடுகிறாா்களாம். குழிக்குள் இறக்குகிறாா்களாம். கோவணம் கட்டுகிறாா்களாம். நான் உங்களிடம் கேட்கிறேன் இந்த  மந்திரக் காரா்களை வைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற முடியுமா? எதிர்வரும் 8ம் திகதி இந்நாட்டை மந்திரக் காரா்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சூனியக் காரா்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். அதற்காக மஹிந்த ராஜபக்ஷவை ஜனவரி மாதம் 8ம் திகதி தோற்கடிக்க வேண்டும்.''

Post a Comment

0 Comments