ஜனாதிபதி மஹிந்தவின் தோ்தல் பிரசாரப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த பசில் ராஜபக்ஷ தற்போது அந்த பணிகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
மஹிந்தவின் புத்திரர்களால் பசில் மீது தொடுக்கப்படும் அழுத்தங்களின் காரணமாக அவா் மைத்திாியை ஆதரிக்கப் போவதாக மஹிந்தவிற்கு அச்சுறுத்தல் விடுத்திப்பதாக அறிய வருகிறது.
சகல ஊடகங்களுக்கும் பசிலுடனான தொடா்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பசில் கடும் சினமுற்று இருப்பதாகவும், இந்நிலை தொடர்ந்தால் தான் எதிரணிக்கு அதரவளிக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படும் என்று பசில் கூறியிருப்பதாகவும் அறிய வருகிறது.
பசில் ராஜபக்ஷ ஐ.தே.க வின் அங்கத்தவராக இருந்து, அமைச்சா் காமினி திசாநாயக்காவின் பிரத்தியேக செயலாளராய் இருந்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments