Ticker

6/recent/ticker-posts

சென்னை புத்தகக் கண்காட்சி - ரூ.10 கோடிக்கு நூல்கள் விற்பனை: குறும்படம், சிறுகதைக்கும் பரிசு


சென்னை பபாசி புத்தகத் திருவிழாவில் புத்தக வாசிப்பை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள், சிறுகதைகளுக்குப் பரிசளிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பதிப்பாளர், விற்பனையாளர்கள் சங்கத்தின் (பபாசியின் Book Sellers and Publishers Association of South India (BAPASI)) 38 ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு குறும்படங்கள் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் 120 குறும்படங்கள் பங்கேற்றதாகவும், அதில் முதல் கட்டமாக 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக மகாவிதுரன் இயக்கிய "ஆயா', ராம் செந்தில்குமார் இயக்கிய "தெய்வா', ராகவ் இயக்கி நடித்த "மோனலாக்' ஆகியவை சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த படத்துக்கு ரூ.5 ஆயிரம் பரிசும், புத்தகத் திருவிழா 2015 சிறந்த குறும்படம் விருதும் வழங்கப்பட்டன. படத்தின் இயக்குநர்களுக்கு நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பரிசளித்தார்.
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.
 ரூ.10 கோடிக்கு புத்தக விற்பனை: புத்தகத் திருவிழாவுக்கு கடந்த 13 நாள்களில் 10 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும், ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்றுள்ளதாகவும் பபாசி நிர்வாகிகள் கூறினர்.
நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி, நிரந்தரமாக புத்தகத் திருவிழா நடத்த உரிய இடத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அடையாறு காவல் துணை ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments