சுகாதார இராஜாங்க அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி ஜனாதிபதி மகித்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டிருப்பதானது அம்பாறை மாவட்டத்திற்குக் கிடைத்த கௌரவமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி சுகாதார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி சுகாதார இராஜாங்க அமைச்சுப் பொறுப்பைப் பெற்றிருப்பதனால் நிந்தவூர் மண் பெருமை கொள்வதுடன் முழு அம்பாறை மாவட்டமும் கௌரவம் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி கட்சி எதிர்நோக்கி பல்வேறு சந்தர்ப்பங்களில் மறைந்த தலைவர் அஷ்ரபின்; நடவடிக்கைகளிலும் தற்போதை தலைமைத்துவத்தின் செயற்பாடுகளிலும் பக்கபலமாக நின்று செயற்பட்டவர்.
அரசியலிலும் நிர்வாகத்திலும் மிக்க அனுபவம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான ஹசன் அலிக்கு இப்பொறுப்பு கிடைக்கபெற்றிப்பது குறித்து மண் பெருமை கொள்வதாகவும் கிடைக்கப்பெற்ற பொறுப்பைக் கொண்டு இப்பிரதே மக்களுக்கு மாத்திரமின்றி முழு நாட்டுக்கும் திறமையுடன் சேவைபுரிய வல்ல இறைவன் துணைபுரிய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments