Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 172 வாகனங்கள் மாயம்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 172 வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
பொலிஸ் மாஅதிபருக்கு இன்று வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின்
பிரகாரம், ஜனாதிபதி செயலகத்தில் 752 வாகனங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவற்றில் கெப் வாகனங்கள், ஜீப் வண்டிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சில வாகனங்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாகவும், சில விரைவில் கையளிக்கப்பட உள்ளதாகவும், சில வாகனங்கள் பாதுகாப்பு பிரிவின் உயரதிகாரிகளிடம் காணப்படுவதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
காணாமற்போன ஏனைய வாகனங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments