Ticker

6/recent/ticker-posts

மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா இராஜினாமா

மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தனது, இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அவர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தின் கீழ், ஆறாவது மேல் மாகாண ஆளுனராக கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி அலவி மௌலானா பதவியேற்றிருந்தார்.
தற்போது 83 வயதான அலவி மௌலானா, 1948ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார். இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் என்பதுடன், தொழில் விவகார அமைச்சராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
அத்துடன், கடந்த 2009ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாண பதில் ஆளுனராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments