
சிரியாவில் கடந்த 4 வருட காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் அந்நாடு அதிகளவு உயிரிழப்புக்களை எதிர்கொண்ட ஆண்டாக 2014 ஆம் ஆண்டு விளங்குவதாகவும் அந்த ஆண்டில் 76,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.
பலியானவர்களில் 3,501 பொதுமக்கள் உட்பட 17,790 பொதுமக்கள் உள்ள
டங்குகின்றனர்.
அதேசமயம் கடந்த ஆண்டில் ஈராக்கில் இடம்பெற்ற மோதல்களில் 15,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது அந்நாடு 2007 ஆம் ஆண்டிலிருந்து அதிகளவு உயிரிழப்புக்களை சந்தித்த ஆண்டாக உள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளும் ஏனைய போராளி குழுக்களும் முன்னேறி வருவதன் காரணமாக அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராக சிரிய நகர்களான ரக்கா, கோபேன், டெயிர் அல்–ஸோரில் 17 இடங்களையும் ஈராக்கிய நகர்களான பலுஜா மற்றும் மொசூலில் 12 இடங்களையும் இலக்குவைத்து வியாழக்கிழமை வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதேசமயம் சிரிய ஜனாதிபதி பஷார் அல்– அஸாத் டமஸ்கஸின் புறநகரப் பகுதியான ஜொபாருக்கு விஜயம் செய்து முன்னரங்கு படையினரைச் சந்தித்தார்.
அஸாத் பீரங்கியொன்றின் அருகிலிருந்த படைவீரர்கள் இருவருடன் உரையாடிய வண்ணம் ஒரு படைவீரருடன் கைகுலுக்குவதை வெளிப்படுத்தும் காட்சி அவரது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அஸாத் பீரங்கியொன்றின் அருகிலிருந்த படைவீரர்கள் இருவருடன் உரையாடிய வண்ணம் ஒரு படைவீரருடன் கைகுலுக்குவதை வெளிப்படுத்தும் காட்சி அவரது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments