Ticker

6/recent/ticker-posts

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசல்: 35 பேர் பலி



சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. சென் யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 43 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments