Ticker

6/recent/ticker-posts

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட்டம்






 
2014ம் ஆண்டின் இறுதி நொடிப்பொழுதுகளுக்கு விடைகொடுத்து 2015ம் ஆண்டு பிறந்ததை வரவேற்றுக் கொண்டாட்டத்தில் மூழ்கின உலக நாடுகள். தென்மேற்கு பசுபிக் கடலில் உள்ள நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில், இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2015 மலர்ந்தது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் சிட்னி நகரமே விழாக் கோலம் பூண்டது.


வடகொரியா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், என பல்வேறு நாடுகளில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் களைகட்டின. சீனாவின் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள மிகப்பெரிய ஃபுர்ஜ் ஃகலிபா கட்டடத்தில் எல்.இ.டி விளக்குளால் புத்தாண்டிற்கான கவுன்டன் ஒளிபரப்பப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. புத்தாண்டு பிறந்ததும் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளால் துபாய் நகரமே அதிர்ந்தது.
வாணவேடிக்கையால் வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தப்பட்ட காட்சிகளை லட்சக்கணக்கான அமீரக மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகளும் கண்டுமகிழந்தனர்.













Post a Comment

0 Comments