காணாமல் போன எம்.எச் 370 மலேசிய விமானத்தின் தேடல் பணிகளை முற்றும் முழுதாக நிறுத்தப் போவதாகவும் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியே காணாமல் போயுள்ளதென்றும் மலேசிய அரசாங்கம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அன்று 239 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு புறப்பட்ட எம்.எச் 370 ரக மலேசிய விமானம் இந்தியக் கடற்பரப்பை அண்மித்த போது கட்டுப்பாட்டறையுடன் காணப்பட்ட தொடர்பை இழந்திருந்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு வருடகாலமாக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து தேடல் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் எதுவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று மலேசிய அரசாங்கம் ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி, காணாமல் போன விமானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளது.
இதில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் இதில் பயணத்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் நம்பப்படுவதாக மலேசிய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments