Ticker

6/recent/ticker-posts

நாளொன்றிற்கு 745 மில்லியன் பேர் பேஸ்புக்கினை தொலைபேசியின் மூலம் பார்வையிடுகின்றனராம் !


நாளொன்றிற்கு 745 மில்லியன் வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கினை பார்வையிடுவதற்கு கைத் தொலைபேசியினை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் பரவலாக அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் 1.39 பில்லியன் மொத்த பாவனையாளர்களில் 745 மில்லியன் பாவனையாளர்கள் தமது பேஸ்புக் கணக்கினை பார்வையிடுவதற்கு கைத்தொலைபேசியினை பயன்படுத்துவதாகவும் இவ்வாறு மாதம் ஒன்றிற்கு 1.18 பில்லியன் பாவனையாளர்கள் பார்வையிடுவதாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டின் சராசரிப்படி நாளொன்றிற்கு 890 மில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்ற போதிலும் இந்த எண்ணிக்கையானது வருடமொன்றிற்கு 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 34 சதவிகிதமானோர் கைத் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர்.
அதேவேளை மாதமொன்றிற்கு 1.39 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்ற போதிலும் இந்த எண்ணிக்கையானது வருடம் தோறும் 13 சதவிகிதத்தினால் அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 26 சதவிகிதமானோர் தொலைபேசியினை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 157 மில்லியன் பாவனையாளர்களும் ஐரோப்பா மற்றும் ஆசிய பசுபிக் நாடுகளில் 217 மில்லியன் பாவனையாளர்களும் கைத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments