Ticker

6/recent/ticker-posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்த பஸ்!


இலங்கை போக்குவரத்து சபைக்கு  சொந்தமான சொகுசு பஸ் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட   பகுதியில் தீப்பிடித்துள்ளது.

இன்று காலை 7.00 மணியளவில் மஹகும்புரவிலிருந்து காலிக்குச் சென்ற பஸ் வண்டியே  இவ்வாறு தீப்பிடித்துளளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின்  தீயணைப்பு பிரிவினரால் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. கஹதுடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments