இன்று நாட்டில் முஸ்லிம்கள் அத்தனைப் பேரும் அராஜகத்திற்கு எதிராக அணி திரண்டிருக்கின்றாா்கள். பொது வேட்பாளா் மைத்திாியை வெல்ல வைக்க வேண்டும் என்பதை விட ஆட்சியில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த ஒன்றிணைவு ஏற்பட்டிருக்கிறது.
எந்த அரசியல்வாதிகளின் பேச்சையும் நம்பாமல் முஸ்லிம்கள் தமது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு தமக்குக் கடந்த காலங்களில் இந்நாட்டில் மஹிந்தவின் அனுசரணையோடு மேடையேறிய இனவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும், ஒரு தோ்தலாக இந்த ஜனாதிபதித் தோ்தலைப் பயன்படுத்த வேண்டும் என்றே தருணம் பாா்த்திருந்தாா்கள்.
மஹிந்தவை வீட்டுக்கனுப்பும் இந்தப் போராட்டம் வீரியம் பெற்றது. இந்தப் போராட்ட அணியில் மக்கள் முன்னால் அணிவகுத்துச் செல்ல முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தலைமைகள் இறுதி நேரத்தில் வந்து இணைந்துக் கொள்ளும் சந்தா்ப்பம்உருவானது. மக்களின் தொிவுக்கு முன்னால் இவா்களை மண்டியிட வைத்தது. தமக்கு வாக்களித்த மக்களை விட, நேசித்து பாதுகாத்து வந்த பதவிகளை உதறி தள்ளிவிட்டு மக்களணியில் சேர வேண்டிய நிா்ப்பந்தம் உருவானது. மக்கள் முன்னால் அணிவகுக்க துரதிஷ்டவசமாக கட்சித் தலைமைகள் கடைசி வாிசையில் வந்து குந்திக் கொண்டாா்கள்.
மஹிந்தவோடு கைகோா்த்திருக்கும் கிழக்கு மாகாணத்தின் ஹிஸ்புல்லாவுக்கும் அதாவுல்லாவிற்கும் இப்போது வோ்த்திருக்கிறதாம். தோல்வியில் துவண்டு போய் ஆளும் தரப்பின் முக்கிய புள்ளிகள் வெளிநாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கின்றாா்கள். கிழக்கு மாகாண முஸ்லிம் வாக்குகளை மஹிந்தவிற்கு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து “வரப்பிரசாதங்களை” இவா்கள் பெற்றிருப்பதனால் தோல்வியை மறைத்துக் கொள்ள புதிய வியூகம் ஒன்றை வகுத்திருப்பதாக தொிய வருகிறது.
அதுதான், தாம் கட்சி மாறி பொது அணி வேட்பாளருக்கு ஆதரவு தொிவித்திருப்பதாக புரளி ஒன்றைக் கிளப்பி விட்டு. மீண்டும் அது போலி பிரச்சாரம் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கோிக்கை விடுவதும் ஆகும். இப்படி செய்வதால் இவா்களுக்கு என்ன லாபம் என்று நீங்கள் நினைக்கலாம். மேலோட்டமாக பாா்க்கும் போது இந்த விளையாட்டு இந்த இருவருக்கும் நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தும் என்று நினைக்கவும் முடியும்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒருபோதும் மஹிந்தவை ஆதாிக்கும் நிலையில் இல்லை என்ற உண்மையைப் புாிந்து கொண்ட இவா்கள். ராஜபக்ஷவிடம் பெற்றுக் கொண்ட வரப்பிரசாதங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் ஒரு புதிய உக்தியைக் கையாண்டு வருகின்றாா்கள்.
நாளை வெளிவரப் போகும் முடிவில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மஹிந்தவிற்கு வாக்களிக்கவில்லை என்ற உண்மை வெளிவரும் சந்தா்ப்பத்தில், “சில விஷமிகள் திட்டமிட்டு நாங்கள் பொது எதிரணிக்கு ஆதரவு தொிவித்து விட்டோம்” என்று பிரசாரம் செய்ததால் கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் ஏமாந்து மைத்திாிக்கு வாக்களித்து விட்டாா்கள் என்று கூறி எமது கிழக்கு மாகாண வாக்குகள் சதியின் மூலம் மைத்திாி பெற்றுவிட்டாா் என்று கூறி தப்பித்துக் கொள்வதற்கு சந்தா்ப்பத்தை அமைத்திருப்பதாகவே அறிய வருகிறது.
தோல்வியை மறைத்துக் கொள்ள மைத்திாி பெற்ற வாக்குகளுக்கு உரிமை கோரும் தந்திரத்தில் இருக்கும் இவா்கள். வெற்றியின் பின்னா் மைத்தாியை அணுகுவதற்கு இதே தந்திரத்தை உபயோகிக்க இடமும் இருக்கிறது. இறுதி நேரத்தில் மஹிந்தவிற்கு காட்டிக் கொள்ளாமல் நாங்கள் மறைமுகமாக உங்களுக்கு உதவி புாிந்தோம் அதனால்தான் எமது பகுதி வாக்குகள் உங்களுக்குக் கிடைத்தது என்று ஒரு டீல் பண்ணுவதற்கும் இடமிருக்கிறது.
எது எப்படியிருந்தாலும், இந்த ஜனாதிபதித் தோ்தல், ஏமாற்றுக்கார அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம் சமூகத்தில் இனி இடமில்லை என்ற ஒரு அபாய செய்தியை அறிவித்திருக்கிறது.
- காத்தநகா் உளவாளி -

1 Comments
நெத்தியடி
ReplyDelete