Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் முதலாவது கறுப்பின செனட்டர் 95ஆவது வயதில் காலமானார்

மெரிக்காவின் முதலாவது கறுப்பின செனட்டர், எட்வார்ட் புறூக் 95ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அமெரிக்க குடியரசு கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் வழக்கறிஞரான எட்வார்ட் புறூக் கடந்த 1996ஆம் ஆண்டு Massachusetts  இல் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கறிஞர் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் அரசாங்க வழக்கறிஞராக செயற்பட்ட முதலாவது கறுப்பினத்தவராவார். மேலும் 1979ஆம் ஆண்டு
வரையில் அமெரிக்க செனட்டில் பணியாற்றிய ஆபிரிக்க அமெரிக்கர்கள் 9 பேரில் எட்வார்ட் புறூக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்வார்ட் புறூக் அளவுக்கு மீறிய பொதுச்சேவையினை மேற்கொள்ளக் கூடிய ஒருவர் எனவும் சிவில் உரிமைகள் மற்றும் பொருளாதார நேர்மை குறித்த போரில் முன்னின்று செயற்பட்டவர் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா எட்வார்ட்டின் மரணச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் Massachusetts  ஆளுநர் டேவில் பட்றிக்ஸ் தனது உயிர் நண்பனை இழந்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments