Ticker

6/recent/ticker-posts

குமார் குணரட்னம் கைதுசெய்யப்படலாம்?

லங்கை வந்துள்ள முன்னிலை சோசலிஷக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்னம் கைதுசெய்யப்படலாமென, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசாவில் இலங்கை வந்துள்ள குணரட்னம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியதெனவும், அவ்வாறு அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் தமது அனுமதியை பெறவேண்டுமெனவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளை கடவத்தையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் குமார் குணரட்னம் உரையாற்றவிருந்ததாகவும் எனினும் அதற்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சோசலிஷ கட்சியின் பேச்சாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்டவரான குமார் குணரட்னம், சோசலிஷ கட்சியின் ஆரம்ப நிகழ்விற்கு இலங்கை வந்திருந்த போது கடத்தப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments