Ticker

6/recent/ticker-posts

எவ்வளவு தேடினாலும் பொலிசாருக்கு சிரிகொத்தவில் ஒரு புண்ணாக்கும் கிடைக்காது ! - பைரூஸ் ஹாஜி

க்கிய தேசிய கட்சி தலைமை காரியாலயத்திற்குள் போலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தேடுதல் நடாத்த வந்திருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கைளை குழப்பம் விளைவிக்கவே அன்றி வேறு எதுவுக்கும் இல்லை என பைறுஸ் ஹாஜியார் குற்றம் சுமத்துகிறார்.
சற்றுமுன் கொழுப்பில் ஊடகவியாலர்களிடம் இது தொடர்பாக
கருத்து வெளியிட்ட அவர் சிரிகொத்த முன்னால் நேற்று நில்பலகாய வந்து ஆர்ப்பாட்டம் செய்ய இருந்தது இதனால் எமது கட்சி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இன்று பொலிஸ் மற்றும் சீ ஐ டி தேடுதல் நடைபெறுகிறது முப்பது வருட யுத்தத்தை முடித்த எமது புலனாய்வு பிரிவுக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறு பூசும் புத்தகங்கள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர் இந்த புதுவருடத்தின் சிறந்த காமடி இதுதான்.இவர்கள் என்ன தேடினாலும் சிரிகொத்தவில் இவர்களுக்கு எந்த புண்ணாக்கும் கிடக்கபோவதில்லை என குறிப்பிட்டார்.
நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறு பூசும் புத்தகம் அச்சடித்தால் அதனை ஆயிரம் பாகங்களாக வெளியிட வேண்டி வரும் அது போன்ற கீழ் தரமான அரசியல் எம்மிடம் இல்லை அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பதவி மோகம் பிடித்த ஒருவன் என்னவெல்லாம் செய்வான் என்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ வரலாற்று உதாரணம் என அவர் குறிப்பிட்டார்.
அஷரப் ஏ சமத்

Post a Comment

0 Comments